பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து பிருத்விராஜ்-பார்வதி இருவரும் ஜோடியாக 'மை ஸ்டோரி' என்கிற புதிய படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப்படத்தை ரோஷிணி தினகர் என்கிற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கதை தொண்ணூறுகள் மற்றும் இன்றைய தேதி என இரண்டு காலகட்டங்களில் நிகழ்கின்றதாம்.
மியூசிக், ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ள இந்தப்படம், கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனருக்கும் நடிகர் பிருத்விராஜூக்குமான மோதலால் முன்னோக்கி நகராமல் நின்றது. பின் ஒரு வழியாக அனைத்தும் சுமூகமாகி இப்போது வரும் ஜூலை-6ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ரோஷினி தினகரின் வேண்டுகோளை ஏற்று இந்தப்படத்தின் ஆடியோவை நடிகர் விஜய்சேதுபதி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.