நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சஞ்சு என்ற பெயரில் தயாராகி உள்ளது. ஒரு மனிதன் பல வாழ்க்கை என்பது படத்தின் சப் டைட்டில். மிஷன் காஷ்மீர், முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், பிகே படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரன்பீர் கபூர் சஞ்சய்தத்தாக நடித்துள்ளார். அவருடன் பிராஷ் ராவல், மனிஷா கொய்ராலா, தியா மிஸ்ரா, சோனம் கபூர், அனுஷ்கா சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் சஞ்சய்தத் இளம் வயது வாழ்க்கை, நடிகர் ஆனது, சிறை வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரில் சஞ்சய்தத்திற்கு 308 பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று கூறி அசர வைத்திருக்கிறார்கள்.
சஞ்சய்தத் பற்றிய வெளிப்படையான படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. ராஜ்குமார் ஹிரானி தயாரித்துள்ள படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் 20-யத் செஞ்சுரி பாக்சும் இணைந்து ஜூன் 29-ம் தேதி படம் ரிலீஸானது.