'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே அவர்கள் நடித்த படங்களில் பின்னணி பாடியவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதன்பிறகு ரஜினி, கமல் முன்னணி நடிகர்களானபோது அவர்கள் இருவருக்கும் அதிகப்படியான பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி.தான்.
சமீபகாலமாக அவர்களின் படங்களில் அவருக்கு அதிகமான பாடல்கள் பாடும் வாய்ப்புகளை புதிய இசையமைப்பாளர்கள் வழங்கவில்லை. அந்தவகையில், ரஜினியின் கபாலி, காலா படங்களில் அவரது குரல் இடம்பெறவில்லை.
இருப்பினும் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அவரது 165வது படத்தில் பின்னணி பாடுகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். குறிப்பாக, ரஜினிக்கு ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் ஓப்பனிங் பாடலை பாடி வந்த எஸ்.பி.பி.,க்கு இந்த படத்தில் அனிருத்தும் அறிமுக பாடலை தான் கொடுத்திருக்கிறார். ஆக, ரஜினி-எஸ்.பி.பி கூட்டணி இந்த படத்தில் மீண்டும் மாஸ் காட்டப்போகிறது.