தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 1993-ம் ஆண்டு ஜூராசிக் பார்க் படத்தை இயக்கினார். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து வசூல் சாதனை செய்த படம் அது. அதன் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. இந்த வரிசையில் ஜூராசிக் வோர்ல்ட் என்ற படம் 2015ம் ஆண்டு வெளிவந்தது. இதனை ட்ரெவோரோவ் இயக்கி இருந்தார். கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ், நடித்திருந்தனர். இதுவும் வசூல் சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்த கடந்த 22ந் தேதி இதன் இரண்டாம் பாகம் ஜூராசிக் வோர்ல்ட் பாலன் கிங்டம் என்ற பெயரில் வெளிவந்தது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடித்திருந்தனர். ஜே.ஏ.பயோனா இயக்கி இருந்தார். இதன் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சி தான். இதுவும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இதுபோன்ற ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவில்தான் வசூலை குவிக்கும் ஆனால் தற்போது அமெரிக்க மக்கள் கால்பந்து போட்டியில் கவனம் செலுத்துவதால் அங்கு மட்டும் வெளியிடாமல் ஐரோப்பிய நாடுகள் மற்றும், இந்தியா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியானது. இந்த நாடுகளில் மட்டும் இதுவரை 3 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் 1500 கோடி வசூலித்துள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டு அங்கு 150 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. உலகளவில் 4 ஆயிரம் கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.