இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவை சினிமாவாக எடுப்பது ஒரு வகை என்றால் அதனை வித்தியாசமாக எடுத்து கவனம் பெறுவது இன்னொரு வகை. இந்த வரிசையில் வருகிறது பிராணா என்ற மலையாளப்படம். இதில் என்ன வித்தியாசம் என்றால் நித்யா மேனன் மட்டுமே நடிக்கிறார். வேறு கேரக்டர்கள் கிடையாது.
ஒரு பெண்ணை சுற்றி நிகழும் கதை. ஒருவர் மட்டுமே நடித்துள்ள படங்கள் சில இதற்கு முன்பும் வெளிவந்துள்ளது. ஆனால் அவைகள் மிகச் சிறு பட்ஜெட்டில், புதியவர்களால் எடுக்கப்பட்டது. ஒரு முன்னணி நடிகை நடிக்க, பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் பிராணா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் தயாராகிறது.
வி.கே.பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ரசூல் பூக்குட்டி சவுண்ட் எடிட்டிங் செய்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிராணா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த போஸ்டர், படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
"வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குனர் பிரகாஷ், இந்த கதையை சொன்னபோது அதில் நிறைய சவால்கள் இருந்தது. அதனாலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். நிறைய கேரக்டர்களுடன் நடித்து விட்டு தனி ஆளாக நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது" என்கிறார் நித்யா மேனன்.