தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை 28 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஜய் வசந்த். அதன் பிறகு சரோஜா, கனிமொழி, மங்காத்தா, பிரியாணி, என்னமோ நடக்குது, அச்சமின்றி, வேலைக்காரன் படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் படம் மை டியர் லிசா.
ராஜன் கிருஷ்ண தேவன் இயக்கும் இந்தப் படத்தை போருஸ் சினிமா, சாந்தினி சினிமா தயாரிக்கிறது. விஜய் வசந்துடன் லீஸ்சா, சுவாமிநாதன், மயில்சாமி நடிக்கிறார்கள். இதன் படப்படிப்புகள் கடந்த சில நாட்களாக ஊட்டியில் உள்ள ஒரு பங்களாவில் நடந்து வந்தது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளைமாக்ஸ் சண்டைகாட்சி படமானபோது விஜய் வசந்த் குழியில் தவறி விழுந்ததில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர்.
விஜய் வசந்த் சென்னை கொண்டுவரப்பட்டு இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவரது கால் எலும்பு முறிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 வாரத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.