பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மறைந்த தெலுங்கு நடிகர் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார். கிரிஷ் இயக்கும் இந்த படத்தில் தற்போது நாகசைதன்யாவும் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, என்டிஆர், நாகேஸ்வரராவ் ஆகிய இருவருமே சமகாலத்து நடிகர்கள். அவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள் ளனர். இதனால் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாகேஸ்வரராவ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெறுகிறது.
மேலும், ஏற்கனவே சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதியில் தனது தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நடித்துள்ள நாகசைதன்யா, இப்போது என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்திலும் மீண்டும் தாத்தாவின் வேடத்தில் நடிக்கிறார்.