ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
தற்போது குயின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். மேலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துவரும் காஜல்அகர்வால், சில ஆண்டுகளாகவே ஒரு பங்குதாரருடன் இணைந்து மும்பையில் ஜூவல்லரி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக அவருக்கு படம் தயாரிக்கும் ஆர்வமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து காஜல்அகர்வால் கூறுகையில், ஜூவல்லரி வியாபாரத்தை இன்னும் விரிவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். மேலும், சினிமாவிலும் நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் படம் தயாரிக்கும் ஆசையும் உள்ளது. அதற்கான சரியான சந்தர்ப்பம் கூடி வரும்போது நான் தயாரிப்பாளராகவும் உருவெடுப்பேன் என்கிறார்.