மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இதற்கான அமைக்கப்பட்ட பிரமாண்ட வீட்டில் 60 கேமராக்கள் கொண்டு இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் வெளி மாநிலம், மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெப்சி தொழிலாளர்கள் சுமார் 25 பேர் பிக்பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர். வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு பணியாற்றக்கூடாது பெப்சி தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இதை நாங்கள் எதிர்க்கிறோம். இதுதொடர்பாக ஜூன் 25-ம் தேதி வரை அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் உரிய நடவடிக்கை இல்லையென்றால் ஜூன் 29-ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடத்தப்படும். இந்த விஷயத்திலும் கமலும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.