இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் மாரி 2 உருவாகி வருகிறது. தனுஷ் உடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் மாரி 2 படப்பிடிப்பின் போது தனுஷூக்கு அடிப்பட்டு கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவின. இதுகுறித்து தனுஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...
எனது அன்பான ரசிகர்களுக்கு, எனக்கு ஏற்பட்டது பெரிய காயம் அல்ல. நான் நலமாக உள்ளேன். உங்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. எனது பலத்தின் தூண்களாகிய உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.