பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் நடிக்கும் 62வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் பர்ஸ்ட் லுக்கும் டைட்டிலும் நேற்று வெளியிடப்பட்டது. படத்திற்கு சர்கார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயின், ஏ.ஆர்.ரகுமான் இசை. இந்தப் படத்தில் விஜய்யின் தோற்றம், இதற்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி, துப்பாக்கி படங்களின் சாயலிலேயே இருந்தது. ஆனால் இதனை மறுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். சர்கார் படம் பற்றி அவர் கூறியதாவது:
துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளேன். ரசிகர்களை கவரும் வகையில் இந்தப் படம் இருக்கும். ரசிகர்களை மகிழ்விக்க தீபாவளிக்கு படம் வெளிவருகிறது. துப்பாக்கி, கத்தி படங்களுக்கு ரசிகர்கள் அமோக ரவேற்பு கொடுத்தார்கள். அதிலிருந்து வேறுபட்டு, அதைவிட சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை ஆலோசித்து இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறோம். கண்டிப்பாக முந்தைய படங்களை தாண்டி இந்தப் படம் ரசிகர்களை கவரும் என்கிறார் முருகதாஸ்.