அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
விஜய்யின் 62வது படத்தின் தலைப்பு சர்கார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் ட்ரீட்டாக கொண்டாகி வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி வருகிறது என படத்தின் தலைப்பே உறுதி செய்துள்ளது.
மெர்சல் படத்தில் விஜய், பாடலாசிரியர் விவேக் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சேர்ந்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.
இந்நிலையில் இந்த கூட்டணி சர்கார் படத்திலும் தொடர்கிறது. இதுகுறித்து பாடலாசிரியர் விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "விஜய்க்காக, ரஹ்மான் உடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. பொதுநலம் கருதி படம் எடுக்கும் முருகதாஸின் படத்தில் இணைய வேண்டும் என்கிற, என் கனவும் நிறைவேறி உள்ளது. சர்கார் படக்குழுவிற்கு நன்றி" என தெரிவித்திருக்கிறார்.