தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். பாடகி, இசையமைப்பாளர், நடிகை என சினிமாவில் பன்முகம் காட்டி வரும் ஸ்ருதி, இப்போது தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார்.
லென்ஸ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் அடுத்தப்படியாக தி மஸ்கிட்டோ பிலாஸபி என்ற வித்தியாசமான படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தை தனது இஸிட்ரோ மீடியா சார்பில் ஸ்ருதிஹாசன் தயாரிக்கிறார்.
படம் தயாரிப்பது பற்றி ஸ்ருதி கூறுகையில், தி மஸ்கிட்டோ பிலாஸபி கதையை கேட்டதும் வித்தியாசமாக இருந்தது. ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் முந்தைய படமான லென்ஸ் பார்த்து வியந்தேன். எளிய கதையை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வை வித்தியாசமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. எங்களது இஸிட்ரோ நிறுவனம் புதுமையானவற்றை நம்புகிறது என்கிறார்.
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நான்கு நண்பர்களின் கதையின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீன எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் உரையாடல் உடன் கூடிய படமாக உருவாகிறது என்கிறார்.