புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் டிராபிக் ராமசாமி. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமியாக நடித்திருக்கிறார். ரோகினி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியும், விஜய் ஆண்டனியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். விக்கி இயக்கி உள்ளார்.
இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் முன்னோட்டத்தை பார்த்த கமல்ஹாசன் படத்தை பாராட்டியிருக்கிறார். அவர் கூறியதாவது...
"அஹிம்சைதான் சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா. மகாவீரர் காலத்தில் தொடங்கி இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந்திருக்கிறது.
மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பார்லிமென்ட் கிணற்றுக்குள் தேடினால் கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியான வரை பாதசாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள். அப்படி தேடாமல் கிடைத்தவர் தான் டிராபிக் ராமசாமி. இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு.
இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல சித்தரித்ததுண்டு. ஆனால் டிராபிக் ராமசாமி, எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய வீரர் இவர். அப்படிப்பட்டவரை இருக்கும் போதே படமாக்கும் முயற்சி, அதுவும் அவரே பார்த்துப் பாராட்டி ரசிக்கும் படி படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படக்குழுவுக்கு இதுவே முதல் வெற்றி. அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும்.
எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில் படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர். அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல் படங்கள் எடுத்தவர். அவரே ஒரு இயக்குநராக இருந்தும் விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கும் ஒரு தொடக்கம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது.
நடந்து முடிந்த கதையை படமாக்கும் போது சிலவற்றை வளைக்கலாம். ஆனால் நடந்து கொண்டிருக்கும் கதையைப் படமாக எடுப்பது சிக்கலானது. நடந்த ஒரு கதையை 'ஹேராம்' படமாக நான் எடுத்த போது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்
டிராபிக் ராமசாமியான மனிதர்களின் வெற்றி தான் இந்தியாவின் வெற்றி. டிராபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும். இந்தியாவின் வெற்றி இந்த மாதிரி சாமான்ய வீரர்களால் தான்.
படத்தின் டிரைலர் பார்க்கும் போதே முழுப்படமும் பார்த்த மாதிரி உணர்ந்தேன். முழுப்படத்தையும் பார்க்க வேண்டும் என ஆவல் வந்தது. மீண்டும் சொல்கிறேன் வீரத்தின் உச்சகட்டம் தான் அஹிம்சை, அதற்கு உதாரணம் டிராபிக் ராமசாமி".
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.