'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 62-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இந்த படத்தை தீபாவளி வெளியீடு என்று சொல்லியே ஆரம்பித்தவர்கள் அதற்கேற்ப படப்பிடிப்பையும் நெருக்கி விட்டனர். அதனால் இந்த படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகி விட்டது.
அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படத்தையும் சொன்னபடியே முடித்து வருகிறார்கள். அதனால் இந்த படமும் கண்டிப்பாக தீபாவளி ரிலீஸ் என்கிறார்கள். ஆக, இந்த தீபாவளிக்கு விஜய்யும், சூர்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது உறுதியாகி விட்டது.
அதேசமயம், அஜித்தின் விஸ்வாசமும் தீபாவளி ரிலீஸ் என்று சொன்னபோதும் தற்போதுதான் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கப்போகிறது என்பதால், இந்த படம் தீபாவளி ரிலீசில் இருந்து பின்வாங்கி விடும் என்கிறார்கள்.