பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆசியாவின் புகழ்பெற்ற திரைப்பட விழா, சீன தேசத்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா. 21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திரைப்பட விழாவில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 6 படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதில் தேர்வான ஒரே தென்னிந்திய திரைப்படம் தமிழ் படமான "பேரன்பு". பி.எல்.தேனப்பன் தயாரிப்பில், ராம் இயக்கத்தில் மம்மூட்டி, தங்கமீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் மற்றும் பலர் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் படம் இது.
கடந்த ஜனவரியில் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. தற்போது ஷாங்காய் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளது. 16-ம் தேதி ஏசியன் பிரிமீயர் ஷோவிலும், 17-ம் தேதி பார்வையாளர்களுடன் கலந்துரையாடலின் போது பேரன்பு திரையிடப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை மூன்றாவது முறையாகவும் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பலரும் பாராட்டினார்.
விரைவில் இந்தியாவில் இத்திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.