ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2 வருடங்களுக்கு முன்பு சமுத்திரகனி இயக்கி, நடித்த படம் அப்பா. அவருடன் தம்பி ராமய்யா, வினோதினி, யுவலட்சுமி, சசிகுமார் உள்பட பலர் நடித்தனர். சசிகுமார் தயாரித்திருந்தார். இந்தப் படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. சமுத்திரனி இயக்கிய முதல்படமான உன்னை சரணடைந்தேன் படத்தை தயாரித்த எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். அப்பா படம் சிறுவர்கள் படிக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி சொன்னது. அப்பா 2ம் பாகத்தில் அதே சிறுவர்கள் கல்லூரிக்கு செல்லும்போது சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேச இருக்கிறது.
தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சமுத்திரகனி தற்போது நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருப்பதும், 3வது பாகத்தை இயக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.