இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இன்று (ஜூன் 17) முதல் துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசனே நடத்துகிறார்.
இதில் கலந்து கொள்பவர்கள் குறித்த முழு விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் 16 பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பிக்பாஸ் 2 குறித்த அதிகாரப்பூர்வ புரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இது புதிய திருப்பமாக 17 வது ஆளாக பிக்பாஸ் 2 விலும் நடிகை ஓவியா கலந்து கொள்வதாக கமலே அறிவிக்கிறார். மேடைக்கு வந்து ரசிகர்களை சந்திக்கும் ஓவியா, பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது போலவும் அந்த வீடியோ அமைந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 1 ல் அதிக பரபரப்பையும் ஏற்படுத்தி, ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று பிரபலமானவர் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே பிக்பாஸ் 2 விலும் ஓவியா கலந்து கொள்கிறாரா, இல்லை இது பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான புரோமோ மட்டும் தானா என்பது இன்னும் 3 மணி நேரத்தில் தெரிந்துவிடும்.