பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கெண்ட சமந்தா, திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வருகிறார். அதோடு அவர் நடித் தார் ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. அதையடுத்து தற்போது சூப்பர் டீலக்ஸ், சீமராஜா படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன.
தற்போது யுடர்ன் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். மேலும் திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெற்று வருவதால், அடுத்து ஒரு மெகா ரவுண்டு வருவதற்கு இந்த படங்கள் அஸ்திவாரம் போட்டு விட்டதாக நினைத்தார் சமந்தா.
ஆனால், தற்போது அவர் கைவசம் யுடர்ன் ரீமேக் மட்டுமே உள்ளது. அதையடுத்து எந்த படமும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை. புதிய படங்களில் நடிக்க பேசிக்கொண்டு வருகிறேன் என்று மட்டுமே பேட்டிகளில் தெரிவித்து வருகிறார் சமந்தா.
அதோடு சமந்தா நடிப்பில் திருமணத்திற்கு பிறகு வெளியான ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை மற்றும் தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் அனைத்துமே திருமணத் திற்கு முன்பே அவர் கமிட்டான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.