கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் |
நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. ஆர்யா தனது தம்பியையும் ஹீரோவாக்க முயற்சித்தார். புத்தகம் என்ற படத்தில் சத்யா அறிமுகம் ஆனார். அதன்பிறகு அமரகாவியம், எட்டுத்திக்கும் மதயானை படத்தில் நடித்தார். தற்போது அண்ணனுடன் இணைந்து அமீர் இயக்கும் சந்தன தேவன் படத்தில் நடித்து வருகிறார்.
கேரள முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்யாவின் தம்பி சத்யா பாவனா என்ற இந்து பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். அண்ணனுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று காத்திருந்தார். அண்ணனுக்கு இப்போதைக்கு திருமணம் ஆகிற மாதிரி தெரியவில்லை என்பதால் அண்ணனுக்கு முன்னதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற 22ந் தேதி சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடக்கிறது. அன்று மாலையே திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.