வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிக்பாஸ் இரண்டாவது சீசன் நாளை(ஜூன் 17) முதல் துவங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு நாளையே தெரியவரும். ஆனால், சமூக வலைதளங்களில் இவர்கள் பங்கேற்கிறார்கள், அவர்கள் பங்கேற்கிறார்கள் என சிலரின் பெயர்கள் அடிபடுகின்றன.
அந்தவகையில் இந்த போட்டியில் நடிகை சிம்ரனும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு, அவர் பிக்பாஸில் பங்கேற்று இருப்பது போன்ற போட்டோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் இதற்கு சிம்ரன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அவரது தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "சில ஷோக்களில் நான் பங்கேற்க போவதாக வெளியாகும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது. போட்டோஷாப் மூலம் மார்ப் செய்யப்பட்ட போட்டோக்கள் குட் ஜாப். எனது அறிவுக்கு எட்டியபடி, சமீபத்தில் எந்த டிவி நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்கவில்லை. வருங்காலத்திலும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க போவது இல்லை.
இவ்வாறு சிம்ரன் கூறியுள்ளார்.