'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது படத்தில் நடிகராக அறிமுகமாகி, 'சார்லஸ் ஷபீக் கார்த்திகா'(CSK), மற்றும் 'மாலை நேரத்து மயக்கம்' (MNM) உட்பட சில படங்களில் நடித்தவர் ஷரன்.
நடிகரான இவர் கிரிக்கெட் வீரரும் கூட. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை ரினோஸ் சார்பில் விளையாடியவர். கடந்த சில வருடங்களாக சரியான படவாய்ப்பில்லாமல் இருந்த இவர் இப்போது ஒரு படத்தை இயக்குகிறார்.
ஷரன் இயக்கும் படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் மற்றொரு கதாநாயகனாக 'சென்னை டு சிங்கப்பூர்' படத்தில் நடித்த கோகுல் ஆனந்த் நடிக்கிறார். ஷரன் தன்னுடைய முதல் படத்தை டார்க் த்ரில்லர் படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.
மலைப்பிரதேசம் ஒன்றில் நடக்கும் கதை என்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த உள்ளனர். அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.