ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
'வாயை முடி பேசவும்', 'ஓகே கண்மணி' படங்களுக்குப் பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் நேரடி தமிழ்ப்படம் வெளிவரவில்லை. அதாவது அவர் தமிழ்ப்படத்தில் நடிக்கவில்லை. தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான், வான் என்ற நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். ரா.கார்த்திக் என்பவர் இயக்குகிறார். தமிழில் பல படங்களை தயாரித்துள்ள 'கெனன்யா ஃபிலிம்ஸ்' இந்த படத்தை தயாரிக்கிறது. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யுயம் இந்த படத்திற்கு தீனதயாளன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார்.
வான் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மலையாள ரைட்ஸை துல்கர் சல்மானே வாங்கிக்கொள்வதாக சொல்லி இருக்கிறாராம்.