வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கி முடித்தும் சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்க ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் ஈடுபட்டிருந்தார் பா.ரஞ்சித். அப்போதுதான் அவருக்கு ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் ரஜினி படத்தை இயக்கிவிட்டு வாருங்கள் அதன்பிறகும் நாம் இணைவோம் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் சூர்யா.
ஆனால் கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித், அதையடுத்து காலா படத்தையும் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பினை பெற்றார். இந்த நிலையில், அடுத்தபடியாக சூர்யாவை இயக்க அவர் தயாராகிவிட்டார். ஏற்கனவே சூர்யாவுக்காக ரெடி பண்ணிய அதே கதையைத்தான் படமாக்கப்போகிறாராம் பா.ரஞ்சித்.