தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. அதன்பிறகு இந்திக்கு சென்று பிசியான அவர், தற்போது அங்கு படவாய்ப்புகள் குறைந்து வருவதால் 6 ஆண்டுகளுப்பிறகு தெலுங்கிற்கு வந்து ரவிதேஜாவுடன் அமர் அக்பர் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இலியானா தனது பாய்பிரண்டு ஆட்ரூவை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாகி விட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து எந்த மறுப்பும் சொல்லாமல் மவுனம் சாதித்தார் இலியானா. இதனால் அந்த செய்தி உண்மையாக இருக்குமோ என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது தான் கர்ப்பமாக இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளார் இலியானா. அதே சமயம் தனக்கு திருமணம் நடந்ததாக வெளியான செய்தியை அவர் மறுக்கவில்லை. இப்போதே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பை தொடர ஆசைப்படுகிறேன் என்பதை மட்டும் தெரிவித்துள்ளார்.