ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபு, தற்போது வம்சி இயக்கும் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடிக்கிறார் அவர். பாலிவுட் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஹக்கிம் ஆலம் என்பவர் மகேஷ்பாபுவின் ஹேர்ஸ்டைலை வடிவமைத்துள்ளார்.
இதற்காக சிலமுறை மும்பை சென்று வந்திருக்கிறர்ர மகேஷ்பாபு. இதையடுத்து அவர் இந்தி படத்தில் நடிப்பதற்காக சில தயாரிப்பாளர்களை சந்தித்து பேசி வருவதாக டோலிவுட்டில் வதந்தி பரவி விட்டது.
இந்நிலையில், ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்த மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா, அந்த செய்தியை மறுத்துள்ளார். அதோடு, தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே அவர் மிகுந்த சந்தோசமாக இருக்கிறார். அதேசமயம், இந்தி படவாய்ப்பு வந்தால் நடிப்பார். இல்லையென்றால் தெலுங்கு படங்களிலேயே மகிழ்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பார் என்று தெரிவித்துள்ளார்.