பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவா இயக்கத்தில் அஜித்குமார், நான்காவது முறையாக நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அந்த படப்பிடிப்பில் அஜித்துடன் நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து வந்தனர்.
அதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இப்போது ராஜமுந்திரியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில் அஜித்குமார் இரண்டு வேடங்களில் நடிப்பதும் தெரியவந்துள்ளது. அதில் ஒரு கேரக்டரில் மென்மையானவராகவும், இன்னொரு கேரக்டரில் கோபம் வந்தால் பொங்கி எழும் வேடத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. வட சென்னை பின்னணி கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது.