இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் "சாகோ". UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க, சுஜீத் இயக்குகிறார்.
ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபுதாபியில், அந்நாட்டு அரசின் சிறப்பு அனுமதியோடு நடந்து வருகிறது. இங்கு ஆக்ரோஷமும் அதிரடியும் நிறைந்த ஒரு மெகா சண்டைக்காட்சியில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக்காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், கிட்டத்தட்ட 37 கார்களையும் 5 டிரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொருக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது "சாகோ".