தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஷாரூக்கான், காத்ரினா கைப், அனுஷ்கா சர்மா மற்றும் பலர் நடிக்கும் 'ஜீரோ' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த டீசரில் சல்மான் கானுடன் இணைந்து ஷாரூக்கான் நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளன. டீசரின் முடிவில் சல்மான் கான் இடுப்பின் மீது ஷாரூக் கான் தாவிக் குதித்து உட்காருகிறார். அதோடு சல்மானுக்கு முத்தமும் கொடுக்கிறார் ஷாரூக்.
உயரம் குறைவான மனிதராக ஷாரூக் நடிக்கும் 'ஜீரோ' படத்தின் இந்த புதிய டீசர் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே நாளில் 1 கோடியே 30 லட்சம் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
'ஜீரோ' படத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா' ஹிந்திப் படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷ், இந்த டீசர் நேற்று வெளியானதுமே பாராட்டு தெரிவித்திருந்தார். அதற்கு ஷாரூக் கான் உடனடியாக தனுஷுக்கு அவருடைய நன்றியைத் தெரிவித்துள்ளார். நன்றியோடு மட்டும் நிற்காமல் தனுஷை 'AAA+++' நடிகர் என்றும் பாராட்டியிருக்கிறார்.
“மிக்க நன்றி, உங்களைப் போன்ற அன்பான, உங்களைப் போன்ற உண்மையான 'AAA+++' நடிகரிடமிருந்து கிடைத்த பாராட்டு சிறப்பானது,” எனப் பாராட்டியுள்ளார்.
சிம்பு நடித்தது வேண்டுமானால் 'AAA' படமாக இருக்கலாம், ஆனால், ஷாரூக்கிடம் 'AAA+++' பாராட்டு பெற்ற நடிகர் தனுஷ் என தனுஷின் ரசிகர்கள் ஷாரூக்கின் டுவீட்டை கொண்டாடி மகிழலாம்.