'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலிவுட்டில், விஜய்சேதுபதியின் வெற்றிக் கொடி, உயர உயர பறந்து கொண்டே இருக்கிறது.
கடுமையான போட்டி நிலவினாலும், படத்துக்கு படம், கதையிலும், கேரக்டரிலும் வித்தியாசம் காட்டுவதால், அவருக்கென தனி ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
அடுத்ததாக, 96 என்ற படத்தில் நடிக்கிறார். இதில், 16, 36 மற்றும் 96 வயதுள்ள நபராக, மூன்று, 'கெட் அப்'களிலும் நடிக்கிறாராம். முதல் முறையாக, இந்த படத்தில், த்ரிஷாவுடன்
நடிக்கிறார், விஜய்சேதுபதி.த்ரிஷா பெயரை கூறினாலே, விஜய் சேதுபதியிடம்
மரியாதை, தானாகவே ஒட்டிக் கொள்கிறது. 'பல ஆண்டுகளாக, சினிமாவில் இருக்கிறார். ஆனாலும், அவரிடம் எந்த பந்தாவும் இல்லை' என, த்ரிஷாவுக்கு பாராட்டு பத்திரம்
வாசிக்கிறார், விஜய்சேதுபதி.