'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. 'என்.ஜி.கே' என்றால் என்ன அர்த்தம் என்று சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 'என்.ஜி.கே' வின் அர்த்தம் தெரிய வந்துள்ளது.
நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் அது. படத்தில், சூர்யாவின் பெயர் இது என்கின்றனர். சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.
இது ஒரு கேங்ஸ்டர் படம் என்றும், அரசியல் ரீதியான படம் என்றும் தகவலும் வெளியாகியுள்ளது. என்.ஜி.கே. படம், தீபாவளிக்கு ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதை 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்தார் சூர்யா.
இதைத்தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. இந்தப்படத்தில் நடித்து முடித்த பிறகு, 'இறுதிச்சுற்று' சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.