வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
தமிழில் அறிமுகமானாலும் டாப்ஸி இப்போது பாலிவுட்டில் மிகவும் பிசி. தற்போது, அவர் சூர்மா என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். இது பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமாகும். இதனை சாத்தியா, கில்தில், படங்களை இயக்கிய ஷகாத் அலி இயக்குகிறார். இவர் மணிரத்னத்தின் மாணவர்.
தில்ஜித் தோஷாஞ், சந்தீப் சிங்காக நடிக்கிறார். அவரது காதலி, ஹர்பிரீத் ரோலில் டாப்ஸி நடிக்கிறார். சங்கர் இஷான் லாய் இசை அமைக்கிறார், சிரத்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்காக டாப்ஸி ஹாக்கி விளையாட்டை கற்று வருகிறார். "விளையாட்டு என்றால் எனக்கு உயிர். நான் மென்மையாவள் அதனால் விளையாட்டிலிருந்து விலகி மீடியாவுக்கு வந்தேன். இப்போது விளையாட்டு வீராங்கனையாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் எனது ஆசையையும் சேர்த்து தீர்த்துக்கொள்ள, தீவிரமாக ஹாக்கி விளையாட்டை கற்றுக் கொண்டு பயிற்சி எடுத்தேன். இது சவாலான வேலை தான். ஆனால் இதனை விரும்பிச் செய்தேன்" என்கிறார் டாப்ஸி.