ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். மர்டர் 2, ரேஸ் 2, கிக், திஷ்ஹோம், பாகி உள்பட பல படங்களில் நடித்தவர், தற்போது டிரைவ் மற்றும் ரேஸ் 3 படங்களில் நடித்துள்ளார். ரேஸில் சல்மான்கான் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜாக்குலின் ஆக்ஷ்ன் ஹீரோயின். சண்டைக் காட்சியில் நடித்தபோது அவரது கண்ணில் காயம் பட்டது. வெடிகுண்டு வெடித்து சிதறும் காட்சியில் அவர் கண்ணில் அதன் துகள் பாய்ந்தது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாக்குலினுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கண்பார்வை பாதிக்கப்படவில்லை என்றாலும் கண்ணின் கருவிழியில் பாதிப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த ஜாக்குலின், இப்போது பூரண குணமடைந்திருக்கிறார். பொதுவாக கண்ணின் கருவிழி சரியான வட்டவடிவில் இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு ஜாக்குலினின் கருவிழி முட்டை வடிவிற்கு மாறி இருக்கிறது.
அந்தப் படத்தை தனது இஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கும் ஜாக்குலின் "இனிமேல் என் கருவிழி இப்படித்தான் இருக்கும். கண்பார்வை இழப்பிலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார். அவரது ரசிகர்களோ "இப்போதும் உங்கள் கண்கள் அழகாத்தான் இருக்கிறது. தைரியமாக இருங்கள் ஜாக்குலின்" என்று ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.