ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னாள் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் ஆக்ஷ்ன் ஹீரோவுமான டுவைன் ஜான்சனுக்கு, தமிழில் தனி ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. கடைசியாக அவர் நடித்த ராம்பேஜ் படம் தமிழிலும் வெளிவந்து வசூலை அள்ளியது. அடுத்து அவரது நடிப்பில் வர இருக்கிறது, 'ஸ்கைஸ்கிராப்பர்'.
தீவிரவாதிகளால் கைப்பற்றப்படும் வானுயரக் கட்டடங்கள், அவற்றில் உயிரைப் பணயம் வைத்து கதாநாயகன் நிகழ்த்தும் சாகசங்களை அடிப்படையாக கொண்டு 'தி டவரிங் இன்பெர்னோ', 'டை ஹார்ட்' உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்தது. அந்த வரிசையில் வருகிறது 'ஸ்கைஸ்கிராப்பர்'.
நேப் கேம்ப்பெல் சின் ஹான், ரோலண்ட் மொல்லெர் உள்ளிட்டோர் உடன் நடிக்க, டுவைன் ஜான்சன் படத் தயாரிப்பிலும் இணைந்திருக்கிறார். ராசன் எம்.தர்பர் எழுதி இயக்கிய இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
துபாயின் புர்ஜ் கலிபாவை விட உயரமான கட்டடமாக, 240 தளங்களுடன் வானளாவும் புதிய கட்டடம் ஒன்று ஹாங்காங்கில் உருவாகிறது. கட்டடத்தின் தலைமை பாதுகாப்பு அலுவலராக எப்.பி.ஐ.யில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியான டுவைன் ஜான்சன் பொறுப்பேற்கிறார். போர் முனையில் ஒரு காலை இழந்த இவர், இதே கட்டடத்தில் மனைவி குழந்தைகளுடன் தங்கி பணியைத் தொடருகிறார்.