நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் விஜய், அஜித் இருவரைப் பற்றிய ஒரு சிறு தகவல் வந்தால் கூட அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு தகவல் இன்று அஜித்தைப் பற்றி வெளிவந்திருக்கிறது. அஜித்திடம் ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லையாம். சாதாரண மொபைல் போன் மட்டும் தான் பயன்படுத்துகிறாராம்.
“உங்க எதிர்ல பந்தாவான போன் வச்சி பேசறதுக்கே கூச்சமாக இருக்கிறது” என படக்குழுவில் உள்ள பலரும் அவரிடம் தெரிவித்துள்ளார்கள். அதற்கு பதிலளித்த அஜித், உங்களுக்கு அந்த போன் தேவைப்படுகிறது, வைத்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு இந்த போன் போதும், வாட்ஸ் அப் பயன்படுத்தும் பழக்கமும் எனக்கில்லை” என்று சொல்லியிருக்கிறார்.
அப்படி என்றால் திரையுலகில் நடக்கும் விஷயங்கள் அஜித்துக்கு எப்படி போய்ச் சேருகிறது என்று கேட்கிறீர்களா. அதற்கென அஜித்தைச் சுற்றி சிலர் இருக்கிறார்கள். தினமும் என்னென்ன நடக்கிறது, பத்திரிகைகளில் என்ன வருகிறது, சமூக வலைத்தளங்களில் என்ன விவாதிக்கிறார்கள் என்பதை தவறாமல் அப்டேட் செய்துவிடுவார்கள். அஜித்திடம் போன்தான் இல்லை, ஆனால், போட்டுக் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.