Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனிருத் லிஸ்ட்டில் விஜய் இல்லையா ?

13 ஜூன், 2018 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Why-anirudh-did-not-mention-Vijay-name?

தமிழ்த் திரையுலகத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வதற்கு மிகப் பொறுமை வேண்டும். இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒருவரை மற்றவர் புகழ்வதைக் கேட்பதற்குத்தான் அந்தப் பொறுமை வேண்டும். சில சமயங்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்கள் அநியாயத்திற்கு மற்றவர்களைப் புகழ்ந்து தள்ளி அவர்களது இருப்பைக் காட்டிக் கொள்வார்கள்.

இரு தினங்களுக்கு முன்பு நடந்த 'ஆர்கே நகர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் மேடையில் அமர்ந்திருந்த நடிகர் சிவா-வைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். அதிலும், அவரை ரஜினிகாந்த், அஜித் ஆகியோருக்கு அடுத்து ஒரு இடம் கொடுத்து புகழ்ந்தது எதற்கு என்றுதான் தெரியவில்லை

நிகழ்ச்சியில் பேசிய அனிருத், “சிவா சாருக்கு வந்து நான் மிகப் பெரிய ரசிகன். தியேட்டருக்கு போய் நான் கம்மியாதான் படம் பார்ப்பேன். 'தலைவர்' படம் பார்ப்பேன், 'தல' படம் பார்ப்பேன். அதுக்கப்புறம் சிவா படம்தான் பார்ப்பேன். இதை நான் மேடைக்காகச் சொல்லலை, உண்மையாவே சொல்றேன். ஒரு நடிகரா அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். 'வணக்கம் சென்னை' படத்துக்கு முன்னாடி இருந்தே சொல்றேன்,” என்றார்.

தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய வசூல் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்யைப் பற்றி அனிருத் சொல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. விஜய் மீது அப்படி என்ன வெறுப்பு அனிருத்துக்கு ?.

Advertisement
100 கோடி கடந்ததா 'காலா' ?100 கோடி கடந்ததா 'காலா' ? தெலுங்கில் ரூ.15 கோடி வசூலித்த அபிமன்யுடு தெலுங்கில் ரூ.15 கோடி வசூலித்த ...


வாசகர் கருத்து (4)

BoochiMarunthu - Paradise papers,பனாமா
15 ஜூன், 2018 - 16:57 Report Abuse
BoochiMarunthu ரஜினி அஜித் சிவா மூணு பேரும் தமிழன் இல்லை .
Rate this:
vira - tamil naadu,இந்தியா
14 ஜூன், 2018 - 14:03 Report Abuse
vira அனிருத் மேல் ஏன் உங்களுக்கு வெறுப்பு ?
Rate this:
Balu - Wellington,நியூ சிலாந்து
14 ஜூன், 2018 - 10:13 Report Abuse
Balu கிளப்பி விடுவிங்க ஜி
Rate this:
selva - chennai,இந்தியா
14 ஜூன், 2018 - 08:24 Report Abuse
selva அது அவரோட தனிப்பட்ட கருத்து , அவரு யாரு படம் பாக்கணும் கூட நீதா சொல்லுவியா ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sandakozhi 2
    • சண்டகோழி 2
    • நடிகர் : விஷால்
    • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
    • இயக்குனர் :லிங்குசாமி
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in