பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ள 'காலா' படம் எதிர்பார்த்ததை விட வசூல் குறைவாக இருப்பது என்பதே உண்மை என்கிறார்கள். வாங்கிய விலையில் சுமார் 50 சதவீதம் வரை நஷ்டம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் தற்போதைய நிலவரம் என்கிறார்கள். ஆனால், படத்தின் வசூல் மிக அதிகமாக இருக்கிறது என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
இருப்பினும் 'காலா' படம் முதல் நான்கு நாட்களில் 100 கோடி வசூலைத் தாண்டியதாக ஒரு கணக்கு சொல்கிறது. அந்தக் கணக்கு உண்மையோ, பொய்யோ, ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் அந்தக் கணக்கை வைத்தே 'காலா' படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாக மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக சுமார் 30 சதவீதம் வரைதான் ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்கள், பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்ட நாட்கள், இந்து கடவுள்களை தேவையின்றி அவமதித்தது, தான் சம்பந்தப்பட்ட சமூகம் சார்ந்த கருத்துக்களை இயக்குனர் வலியத் திணித்தது என பல விஷயங்களால் படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. 'காலா' படத்தால் ஏற்படும் நஷ்டம் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் நடித்து அடுத்து வெளிவர உள்ள படங்களில் எதிரொலிக்கும் என்கிறார்கள்.
'காலா' படத்தின் 100 கோடி வசூலுக்கு இப்படி ஒரு கணக்கு வெளிவந்துள்ளது. தமிழ்நாடு வசூல் 45 கோடி, ஆந்திரா, தெலுங்கானா 12, கர்நாடகா 9, கேரளா 5, வட இந்தியா 4 கோடி, அமெரிக்கா 11 கோடி, சில முக்கிய நாடுகள் 8 கோடி, இதர வெளிநாடுகள் 6 கோடி என ஒரு கணக்கு சொல்கிறார்கள். தயாரிப்பு தரப்பில் எப்படியும் எவ்வளவு வசூல் என்பதை எத்தனை கோடி கொடுத்தாலும் வெளியில் சொல்ல மாட்டார்கள். அதுவரை ரஜினி ரசிகர்கள் மேலே வெளிவந்த ஒரு கணக்கை வைத்து 'காலா' 100 கோடி வசூலித்துவிட்டது என மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்.