இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாக்கள் உலக அளவில் வெளியானாலும் சமீப வருடங்களில் அமெரிக்காவில் எவ்வளவு வசூல் ஆனது என்பது பெருமையாகப் பார்க்கப்படும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் தமிழ்ப் படங்களின் உலக வெளியீடு என்பது மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தான் இருக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாக அந்த நாடுகளின் வசூலை விட அமெரிக்கா வசூலைத் தான் பலரும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் ரஜினிகாந்த் படம் என்றாலே அமெரிக்காவில் தனி வசூல் இருக்கும். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'சிவாஜி' படம் அமெரிக்காவில் புதிய பாதையை ஏற்படுத்தியது. அதன் பிறகு வெளிவந்த பல ரஜினி படங்கள் அதைவிட அதிகமான வசூல் சாதனையை படைத்தன. 'லிங்கா' படம் கூட 'சிவாஜி'யை விட அதிகமாக வசூலித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெளிவந்த 'எந்திரன்' படமும் நல்ல வசூலைப் பெற்றது.
'கபாலி' படம் முந்தைய வசூல் அனைத்தையும் முறியடித்து அதிக வசூலைப் பெற்ற படமாக அமைந்தது. 'கபாலி' வெளிவந்த பின் கடந்த இரண்டு வருடங்களில் தமிழ் சினிமாக்கள் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகின்றன. தமிழ்ப் படங்களுக்கும் அதிகமான தியேட்டர்கள் கிடைக்கின்றன.
அந்த விதத்தில் 'காலா' படம் 'கபாலி' வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'காலா' படத்தை அமெரிக்க வாழ் தமிழர்கள் கண்டுகொள்ளவேயில்லை. முதல் வார இறுதியில் 'கபாலி' படம் சுமார் 23 கோடி வசூலித்தது. 'காலா' படம் முதல் வார இறுதியில் சுமார் 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படி பாதிக்கும் குறைவான வசூலை அமெரிக்காவில் 'காலா' படம் தரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வார இறுதியில் வசூல் நன்றாக இருந்தால்தான் படம் லாபத்தைத் தரும் என்பதே உண்மை.