தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இவன் தந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கி உள்ள படம் பூமராங். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கண்ணனே தயாரித்திருக்கிறார்.
இப்படம் பற்றி இயக்குநர் கண்ணன் கூறும்போது, பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாக தெரிந்தது. இருப்பினும் சரியான திட்டமிடல் மற்றும் நடிகர்களின் ஒத்துழைப்பு காரணமாக 45 நாட்களில் படத்தை முடித்தோம்.
3 வித்தியாசமான தோற்றங்களில் அதர்வா நடித்துள்ளார். புரோஸ்தடிக் மேக்கப் செயல் முறையில் அதர்வாவுக்கு சரியான தோற்றத்தை கொண்டு வந்துள்ளனர் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா. பாலிவுட் நடிகர் உபென் படேல் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரும்.