மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கியவர் சர்ஜன். இதில் லட்சுமி படம் பெண்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. சர்ஜன், தற்போது எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து நயன்தாரா படத்தை இயக்குகிறார்.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அறம் படத்தை தயாரித்த கே.ஜே.ஆர்., ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனம் தயாரிக்கும் 3வது படமாகும். அறம் படம் சமூகம் சார்ந்த கதையில் உருவானது. இந்தப்படம் ஹாரர் படமாக உருவாகிறது.
கடந்த சில மாதங்களாக திரைக்கதை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் இப்போது அது முடிந்து படப்பிடிப்பும் இன்று(ஜூன் 12) முதல் ஆரம்பமானது. முதல்காட்சியாக அலுவலகம் ஒன்றில் இருந்து நயன்தாரா வெளியே வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.