Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் வழங்கிய பிரியாணி!

12 ஜூன், 2018 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Ajith-gave-biryani-treat

நடிகர் விஜயகாந்த், தன்னுடைய படத்தின் சூட்டிங் நடக்கும்போது, படத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான உணவையே வழங்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு போட்டு, அதன்படியே செய்யச் சொல்வார். அனைத்து தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

அதே பாணியில், இப்போது, நடிகர் அஜித்தும் செய்து வருவதாக, தமிழ் சினிமா உலகில் பேசுகின்றனர். தற்போது, விஸ்வாசம் படத்தில், நடிகைகள் நயன்தாரா, கலைராணி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் அஜித், விஜயகாந்த் பாணியை படபிடிப்பில் தொடர்வதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், மூன்று முறை தங்களுக்கு பிரியாணி வழங்கியதாக, நடிகை கலைராணி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நடிகர் அஜித், ரிசர்வ்டு டைப் ஆசாமி. அவர் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். சக நடிகர் - நடிகையரோடு கூட சகஜமாக பழக மாட்டார் என்று தான், கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், விஸ்வாசம் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கும் என்னோடு, அஜித், மிகவும் சகஜமாக பழகினார். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், இதுவரை மூன்று முறை அனைவருக்கும் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார். ஆக, அஜித் குறித்து, வெளியில் பரவி இருக்கும் தகவலுக்கும், அவர் படப்பிடிப்பின் போது நடந்து கொள்ளும் விதங்களுக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இவ்வாறு கலைராணி கூறியுள்ளார்.

Advertisement
சமுத்திரகனிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சிசமுத்திரகனிக்கு கிடைத்த இன்ப ... குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் : த்ரிஷா குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க ...


வாசகர் கருத்து (6)

cp -  ( Posted via: Dinamalar Android App )
13 ஜூன், 2018 - 11:06 Report Abuse
cp எல்லோருக்கும் பிரியானி போட்டு கேப்டன் பாணியை கடை பிடிப்பதனால் பிரியானிகாந்த் என்று அன்போடு அழைக்கப்படுவாய்.
Rate this:
Basha - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஜூன், 2018 - 09:44 Report Abuse
Basha என்ன டா ஷூட்டிங் ஆரம்பிச்சு ரொம்பா நாள் ஆச்சே இன்னும் பிரியாணி நியூஸ் வரலையேன்னு பார்த்த... நன்றி நல்ல பிரியாணி போட்டு சிவாவை இன்னும் குண்ட ஆக்கிடுங்க...
Rate this:
thiagu - pudhukottai,மத்திய ஆப்ரிக்க குடியரசு
12 ஜூன், 2018 - 17:08 Report Abuse
thiagu எங்க தலையே விஜயகாந்த் மாதி்ரி சாப்பாடு போடுறார்னா அப்போ கண்டிப்பா விஜயகாந்த் கெத்துதான்.
Rate this:
gowtham - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு
12 ஜூன், 2018 - 17:05 Report Abuse
gowtham என்னடா இது, விஜயகாந்த் பண்ண எல்லா நல்ல விஷயத்தையும் மறச்சிட்டு இப்பொ வந்து ஒன்னொன்னா சொல்லிட்டு இருக்கீங்க ? ஒருவேளை அஜித் பிரியாணி போடாம போயிருந்தா இதை சொல்லியிருக்க மாடீங்கா ? அந்த நல்லமனிதனை எவ்வளவு நேக்க நாலாபக்கமும் சேர்ந்து அடிச்சீங்க.!! இப்போதான் அவரோட அருமை தெரியுது.
Rate this:
lokesh - Sholingar,மத்திய ஆப்ரிக்க குடியரசு
12 ஜூன், 2018 - 16:57 Report Abuse
lokesh நம்ம தல அஜித் அவர்கள் கேப்டனை போலவே விருந்தளிப்பது ஆரோக்யமான தகவல். நம்ம கேப்டன் எப்பவுமே சூப்பர்தான்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Sandakozhi 2
  • சண்டகோழி 2
  • நடிகர் : விஷால்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
  • இயக்குனர் :லிங்குசாமி
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film VadaChennai
  • வடசென்னை
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in