நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் தனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று தான் நினைத்தார் ரகுல் பிரீத்சிங். ஆனால் அந்த படத்தின் தோல்வி அவரது தெலுங்கு சினிமா மார்க்கெட்டிற்கே உலை வைத்து விட்டது. இப்போது அவருக்கு தெலுங்கில் புதிய படங்கள் புக்காகவில்லை.
ஆனால், தமிழில் என்ஜிகே உள்பட சில படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர், இந்தியிலும் நடித்து வருகிறார். இருப்பினும், தெலுங்கில் விட்ட மார்க் கெட்டை எப்படியேனும் மீண்டும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக தனது போட்டோக்களை அவ்வப்போது டோலிவுட்டில் லீக்-அவுட் செய்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
அதோடு, சில முன்னணி நடிகர்களின் பெயரை முன்வைத்து, இவர்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசையாக உள்ளது என்றும் பேட்டிகளில் தெரிவித்து அவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.