Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் கார்த்தி

11 ஜூன், 2018 - 20:59 IST
எழுத்தின் அளவு:
Karthi-likes-to-act-with-his-brother-suriya

2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கடைக்குட்டி சிங்கம்“. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கார்த்தி பேசியதாவது...

கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது.

நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடி தான் கிடைக்கும். விரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்றார் கார்த்தி.

Advertisement
விஸ்வரூபம் 2 எதிர்ப்பு வந்தால் எதிர்கொள்ள அரசியல்வாதியாக தயாராகிவிட்டேன் : கமல்விஸ்வரூபம் 2 எதிர்ப்பு வந்தால் ... ரஜினியை டிராபிக் ராமசாமியாக நடிக்க வைக்க நினைத்தேன்: ஷங்கர் ரஜினியை டிராபிக் ராமசாமியாக நடிக்க ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in