ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினியுடன், கபாலி படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்தேவுக்கு, அதன்பின் தமிழில் யாரும் பட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது ரஜினியின், காலா படத்தில் நாயகியாக நடித்துள்ள இந்தி நடிகை ஹூமா குரோசி, இந்த படத்தில் நடித்து வந்தபோதே, சில தமிழ்ப்பட இயக்குனர்களை அணுகி, படவேட்டை நடத்தி வந்தார். ஓரிரு இயக்குனர்கள் அவருக்கு பச்சை கொடி அசைத்திருக்கின்றனர். அதனால், அடுத்து, தமிழில் ஒரு மெகா ரவுண்டு வரவேண்டும் என்று கோலிவுட்டில் முகாமிட தயாராகி வருகிறார். அலை மோதும்போதே கடலாட வேண்டும்!
— எலீசா