இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தமிழ் நாட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வருவதுபோல் கேராளாவல் மலையாள நடிகர் சங்கம் (அம்மா) செயல்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் போன்-று அல்லாமல் அம்மாவில் அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். இதன் தலைவராக நடிகரும், பாராளுமன்ற உறுப்பினருமான இன்னோசெண்ட் கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவரின் தலைமையின் கீழ் செயல்பட அனைத்து நடிகர்களுகம் விரும்புவதால் தொடர்ந்து அவர் தலைவராக இருந்து வருகிறார்.
தற்போது மலையாள நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது தலைவராக உள்ள இன்னோசெண்ட் தனக்கு வயதாகிவிட்டதாகவும் முன்புபோல் தன்னால் செயல்பட முடியாது என்பதால் தொடர்ந்து தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்து விட்டார். இதனால் அனைவரின் விருப்பப்படி மோகன்லால் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த கடைசி நாளான நேற்று வரை அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மனுதாக்கல் செய்யாததால் மோகன்லால் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.