ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனது ஆஸ்தான ஹீரோ மோகன்லால் இல்லாமல் கூட படமெடுத்தலும் எடுப்பார், ஆனால் கலை இயக்குனர் சாபு சிரில் இல்லாமல் இயக்குனர் பிரியதர்ஷன் படப்பிடிப்பு தளத்திற்கு போகமாட்டார் என தாராளமாக சொல்லலாம் அந்த அளவுக்கு படத்தின் டைட்டிலை எழுதும்போதே சாபு சிரிலின் பெயரையும் எழுதி விடுவார் பிரியதர்ஷன்.. கடந்த 25 வருடங்களாக நட்புக்கூட்டணி தொய்வில்லாமல் தொடர்கிறது.
இந்த 25 வருடங்களில் பிரியதர்ஷன் சுமார் 53 படங்களை இயக்கியுள்ளார் என்றால் அதில் 43 படங்களுக்கு சாபு சிரில் தான் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மோகன்லால் -பிரபு நடித்த காலாபானி (தமிழில் சிறைச்சாலை) படம் இன்றுவரை இவர்களது கூட்டணியின் பெஞ்ச் மார்க் படமாக விளங்குகிறது.
இப்போதைய லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற வரலாற்று படத்திலும் தனது கலை வண்ணத்தை காட்ட இருக்கிறார் சாபு சிரில் இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் 44வது படம்.