தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
மலையாள திரையுலகை பொறுத்தவரை சித்திரை விஷு, ரம்ஜான், ஓணம், கிறிஸ்துமஸ் ஆகியவை தான் திரைப்படங்களின் கொண்டாட்ட விழாக்காலங்கள்.. அனைத்து முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் தங்கள் படம் இந்த நாட்களில் வெளியாக வேண்டும் என விரும்புவார்கள். தற்போது ரம்ஜான் நெருங்கி வருவதை அடுத்து ரம்ஜான் ரிலீஸ் ரேஸில் தங்களை இணைத்துக்கொள்ள சுமார் 5 படங்கள் தயாராகி வந்தன. இதில் மோகன்லால், மம்முட்டி. பிருத்விராஜ், ஜெயசூர்யா, டொவினோ தாமஸ் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களும் அடக்கம் .
சில நாட்களுக்கு முன்பு இந்த ரேஸில் இருந்து மோகன்லாலின் நீராளி கழன்று கொண்டது. இந்தநிலையில் பிருத்விராஜின் மை ஸ்டோரி, டொவினோவின் மரடோனா ஆகிய படங்களும் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறடித்து. தற்போதைய நிலவரப்படி மம்முட்டி நடித்துள்ள ஆப்ராஹிமிண்டே சந்ததிகள் மற்றும் ஜெயசூர்யாவின் ஞான் மேரிக்குட்டி ஆகிய படங்கள் மட்டும் தான் ரம்ஜான் ரிலீஸாக களத்தில் நிற்கின்றனவாம்.