'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறுகிறது. அங்கே சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
விஸ்வாசம் படத்தின் சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில படங்களாகவே அஜித்தின் ஆஸ்தான சண்டைப்பயிற்சியாளராக இருந்தவர் சில்வா மாஸ்டர். என்ன காரணத்தினாலோ விவேகம் படப்பிடிப்பின்போது சில்வா மீது அஜித்துக்கு அதிருப்தி ஏற்பட்டது. எனவே விஸ்வாசம் படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் திலீப் சுப்பராயனை கமிட் பண்ணினார்கள்.
'மங்காத்தா' படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைப்பது இந்த படத்திற்குத்தான். டூப் இல்லாமல் பெரும்பாலும் அஜித்தை ரியலாக நடிக்க வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளாராம் திலீப் சுப்பராயன்.