பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வழக்கு எண் படத்திற்கு பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய ரா ராஜ்குமார் படம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அந்தப் படம் வெளிவரவில்லை. இந்த நிலையில் பாலாஜி சக்திவேலின் நண்பரும், வழக்கு எண், காதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவருமான விஜய்மில்டன், தயாரிப்பில் பலாஜி சக்திவேல் இயக்கி உள்ள, யார் இவர்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இந்தப்படத்தை விஜய் மில்டனுடன் இணைந்து இசக்கி துரை தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இசக்கி துரையுடன் அஜய், சுபிக்ஷா, பாண்டியன், ராம், விஜயன், அபிராமி, பத்ரி, குரு ரமேஷ், சுவைதர், முத்து, சுரேஷ், கஜபதி, குமரப்பா மற்றும் வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாலாஜி சக்திவேல். ஜாவத் ரியாஸ் இசையமைக்க விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன். இவர்கள் தான் நாயகர்கள். இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக ஜனரஞ்சகமான அம்சங்களுடன் உருவாக்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.