மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஒரு பக்கம் அரசியல் படம் என்றும், மறுபக்கம் இந்து மத எதிர்ப்புப் படம் என்றும், இன்னொரு பக்கம் பா.ரஞ்சித் அவருடைய அரசியல் கருத்துக்களைத் திணித்திருக்கிறார் என்றும் இப்படத்திற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தப் படம் ஒரு ரஜினிகாந்த் படம் என்று சொல்பவர்கள் குறைவாகத்தான் உள்ளார்கள்.
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து சொன்னதற்காக இந்தப் படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. உயர்நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொல்லியும் நேற்று 'காலா' தியேட்டர்கள் முன்பு கன்னட அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தி காட்சிகளை ரத்து செய்ய வைத்தனர். இதனால் பல ஊர்களில் காலா படம் மதியம் மற்றும் மாலைக்கு பிறகு தான் தியேட்டர்களில் வெளியானது.
டிக்கெட்டை முன்பதிவு செய்யும் இணையதளங்களும் நேற்று வரை 'காலா' முன்பதிவை ஆரம்பிக்காமல் இருந்தன. இந்நிலையில் இன்று காலை முதல் அனைத்து முன்பதிவுகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்று பல காட்சிகள் அங்கு முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 130க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 'காலா' வெளியாகியுள்ளது.
'காலா' படத்தை எந்த சிக்கலும் இல்லாமல் வெளியிட கன்னட மக்கள் முன்வர வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசி வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.